/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்னாள் முதல்வர் நுாற்றாண்டு விழா கள்ளக்குறிச்சியில் கருத்தரங்கம்
/
முன்னாள் முதல்வர் நுாற்றாண்டு விழா கள்ளக்குறிச்சியில் கருத்தரங்கம்
முன்னாள் முதல்வர் நுாற்றாண்டு விழா கள்ளக்குறிச்சியில் கருத்தரங்கம்
முன்னாள் முதல்வர் நுாற்றாண்டு விழா கள்ளக்குறிச்சியில் கருத்தரங்கம்
ADDED : ஜன 08, 2024 06:09 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மற்றும் இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில், 'சட்டசபை நாயகர் - கலைஞர்' தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 'சட்டசபை நாயகர் - கலைஞர்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 8ம் தேதி இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் காலை 10.00 மணிக்கும், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் காலை 11:5 மணிக்கும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
சட்டசபை துணைத்தலைவர் பிச்சாண்டி தலைமை தாங்குகிறார். கருத்தரங்கில், எம்.பி.,க்கள், எம்.எல். ஏ.,க்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
கருத்தரங்கில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடக்கிறது. இதில், வெற்றி பெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.