/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனைத்து புத்தகங்களையும் ஆசிரியர்கள் படிக்க வேண்டும் மாஜி தலைமை செயலாளர் 'அட்வைஸ்'
/
அனைத்து புத்தகங்களையும் ஆசிரியர்கள் படிக்க வேண்டும் மாஜி தலைமை செயலாளர் 'அட்வைஸ்'
அனைத்து புத்தகங்களையும் ஆசிரியர்கள் படிக்க வேண்டும் மாஜி தலைமை செயலாளர் 'அட்வைஸ்'
அனைத்து புத்தகங்களையும் ஆசிரியர்கள் படிக்க வேண்டும் மாஜி தலைமை செயலாளர் 'அட்வைஸ்'
ADDED : டிச 08, 2024 04:51 AM

கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வெள்ளி விழா ஆண்டு நுழைவு வாயில் திறப்பு விழா மற்றும் ஆசிரியர், பேராசிரியர்களுக்கான கருத்து ஊக்க பயிற்சியில், முன்னாள் தலைமை செயலாளர் பேசினார்.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் டாக்டர் குமார், செயலாளர் கோவிந்தராஜூ, துணைத்தலைவர்கள் திருஞானசம்பந்தம், ரவிசங்கர், கல்லுாரி ஆலோசகர் மதிவாணன் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பங்கேற்று, கல்லுாரியின் வெள்ளி விழா முகப்பு நுழைவு வாயில் மற்றும் விளையாட்டு மைதானத்தின் அரங்க நுழைவு வாயிலை திறந்து வைத்து பேசும் போது,''ஆசிரியர் பணியே தவப்பணி, கடைசி இருக்கையில் உள்ள மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இன்முகத்துடன் பாடம் நடத்த வேண்டும், தவறு செய்யும் மாணவர்களை தனியாக அழைத்து அறிவுரை கூற வேண்டும்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்களை அனைவரது முன்னிலையிலும் பாராட்ட வேண்டும், ஆசிரியர்கள் அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டும்'' என பேசினார்.
நிகழ்ச்சியில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எலிசபெத் ராணி, செல்லப்பன், துரைசாமி, சுதா, சந்திரசேகர், விவேகானந்தன், மனோபாலா, அனந்தராம்பாபு, அறிவுமதி, அக்பர் கவுஸ், ஜிவிநாதன், செந்தில், கருணாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் நன்றி கூறினார்.