/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்னாள் கல்லுாரி இயக்குனர் பலி
/
முன்னாள் கல்லுாரி இயக்குனர் பலி
ADDED : ஜூன் 20, 2025 03:55 AM
சின்னசேலம்: சின்னசேலம் அருகே நடந்த விபத்தில் முன்னாள் வேளாண் கல்லுாரி இயக்குனர் உயிரிழந்தார்.
சின்னசேலம் அடுத்த ஈரியூர், தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் சுப்ரமணியன், 61; கோவை வேளாண் கல்லுாரியில் இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, விருதாச்சலம் - வி.கூட்ரோடு தேசிய நெடுஞ்சாலையில், பெத்தாசமுத்திரம் பழத்தோட்டம் அருகே சென்ற போது அவரது கார் சாலையோர மரத்தில் மோதியது. படுகாயம் அடைந்தவர் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறந்து விட்டதாக பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.