/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வை உணர்த்த ' ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம் மாஜி அமைச்சர் பொன்முடி விளக்கம்

ADDED : ஜூலை 04, 2025 02:41 AM
திருக்கோவிலுார்: எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வை உருவாக்க வேண்டும் என திருக்கோவிலுாரில் நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசினார்.
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு எல்லோரும் நாம் தமிழர்கள் என்ற உணர்வோடு, ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அதுதான் 'ஓரணியில் தமிழ்நாடு', என்று வலியுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். நாளை (இன்று) முதல் துவங்க இருக்கிறது இத்திட்டம்.
ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று பா.ஜ., அரசு தமிழை எவ்வாறு ஒழிக்க நினைக்கிறார்கள், ஹிந்தியை புகுத்த நினைக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறி ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராடும் உணர்வை ஊட்ட வேண்டும்.
நமது இரு மொழி கொள்கையின் மூலமாக தமிழையும், ஆங்கிலத்தையும் நிலைக்கச் செய்து இருக்கிறோம். அதுதான் கருணாநிதி, அண்ணாதுரையின் சாதனைகள். அதைத்தான் முதல்வர் ஸ்டாலின் செய்துவருகின்றார்.
எனவே நாம் மதத்தால் வேறுபட்டிருந்தாலும், தமிழால் ஒன்றுபட்டவர்கள். நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற உணர்வை உருவாக்க வேண்டும்.
திருக்கோவிலுாரில் விரைவில் பஸ் ஸ்டாண்ட் வர இருக்கிறது. இங்கு கல்லுாரியாக இருந்தாலும், உயர் மட்ட பாலமாக இருந்தாலும், நகராட்சியாக தரம் உயர்த்தியதாக இருந்தாலும் அனைத்து வளர்ச்சி பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை நீங்கள் மறக்க முடியாது.
விழுப்புரத்தை போல திருக்கோவிலுாரை மாற்ற வேண்டும் என நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். அந்த அளவிற்கு மாற்றப்பட்டு இருக்கிறது எனப் பேசினார்.