/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
/
புதிய வகுப்பறை கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
ADDED : டிச 16, 2024 05:03 AM

கள்ளக்குறிச்சி : நைனார்பாளையத்தில் 1.68 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் கனகராஜ், பி.டி.ஓ., ரங்கராஜன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் மலர்கொடி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 68 லட்சம் மதிப்பில், 8 வகுப்பறை கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் சீனுவாசன், மாவட்ட கவுன்சிலர் கலையரசி சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி, முருகேசன், அவைத்தலைவர் துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர் சித்ரா பெரியசாமி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், நிர்வாகி செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.
உளுந்துார்பேட்டை
களமருதுார், கிளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 14.13 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, 14 லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பிலான 21 கூடுதல் வகுப்பறை புதிய கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நஸருல்லா, பள்ளி தலைமையாசிரியர் ரோஸ்லின் கலைச்செல்வி, ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.