/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையம் நாளை அடிக்கல் நாட்டு விழா
/
கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையம் நாளை அடிக்கல் நாட்டு விழா
கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையம் நாளை அடிக்கல் நாட்டு விழா
கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையம் நாளை அடிக்கல் நாட்டு விழா
ADDED : ஜூன் 27, 2025 12:29 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நாளை 28ம் தேதி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி நகரையொட்டி புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சட்டசபை கூட்டத் தொடரில் புதிய பஸ் நிலையத்திற்கு அமைச்சர் நேரு அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதனையடுத்து ஏமப்பேர் கிராம எல்லையில் 5 ஏக்கர் இடம் தேர்வு செய்து ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, நாளை 28ம் தேதி) கள்ளக்குறிச்சி புறநகர் பஸ் நிலையம் மற்றும் குடிநீர் அபிவிருத்தி பணிகள், தினசரி நாளங்கடி அமைத்தல் பணிகள் என மொத்தம் 46 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.
விழாவில் அமைச்சர் வேலு பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்கிறார். விழாவில் கலெக்டர் பிரசாந்த், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.