/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரூ. 4.01 கோடியில் மாவட்ட மைய நுாலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
/
ரூ. 4.01 கோடியில் மாவட்ட மைய நுாலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
ரூ. 4.01 கோடியில் மாவட்ட மைய நுாலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
ரூ. 4.01 கோடியில் மாவட்ட மைய நுாலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
ADDED : செப் 27, 2025 02:30 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ரூ. 4.01 கோடி மதிப்பிலான மாவட்ட மைய நுாலகம் கட்டுமான பணிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் ரூ 4.01 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்படவுள்ள மாவட்ட மைய நுாலகம் மற்றும் மாவட்ட நுாலக அலுவலக கட்டடத்திற்கு, சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர். இதில் நுால்கள் வாங்குதல், தொழில்நுட்ப சாதனங்கள், தளவாட உபகரணங்கள் மற்றும் உட்புற வடிவமைப்புக்கு ரூ. 1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்புதிய மாவட்ட நுாலகம் 4 தளங்களுடன், நுாலகர் லாக்கர் அறை, புத்தக வெளியீடு, பெண்கள் பிரிவு, போட்டி தேர்வு பிரிவு, குடிநீர் சுத்திகரிப்பு, லிப்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாலா, மாவட்ட நுாலக அலுவலர் விஜயக்குமார், நகராட்சி கமிஷனர் சரவணன், தி.மு.க., மாவட்ட அவை தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய சேர்மன் தாமோதிரன் உட்பட பலர் பங்கேற்றனர்.