தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு பணிமனையில் பேட்டரி திருடிய நால்வர் கைது

 அரசு பணிமனையில் பேட்டரி திருடிய நால்வர் கைது

 அரசு பணிமனையில் பேட்டரி திருடிய நால்வர் கைது


ADDED : பிப் 08, 2026 02:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 02:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட பயன்படுத்த முடியாத கழிவு செய்யப்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பேட்டரிகளை மர்ம நபர்கள் அடிக்கடி திருடிச் செல்வது தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி மாலை மர்ம நபர்கள் பஸ்சிலிருந்து பேட்டரிகளை கழற்றுவதை பார்த்த பணிமனை ஊழியர்கள் துரத்திச் சென்றனர். பலர் அங்கிருந்து தப்பித்து ஓடினர். ஊழியர்களிடம் சிக்கிய நபரிடம் நடத்திய விசாரணையில், குடமுருட்டியைச் சேர்ந்த சேகர் மகன் ஜெயசூர்யா, 20; என தெரியவந்தது.

பிடிப்பட்ட நபரை போலீசில் ஒப்படைத்து, பணிமனை கிளை மேலாளர் நாராயணமூர்த்தி புகார் அளித்தார். அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், பழனி மகன்கள் கள்ளியப்பன், 21; அருள்பாண்டியன், 25; மணம்பூண்டியைச் சேர்ந்த தனிஸ்லால் மகன் டோமினிக் பீட்டர் ராஜா, 42; ஆகியோர் பேட்டரி திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us