ADDED : அக் 14, 2024 04:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் காமராஜ், 33. இவர், தனியார் வங்கியில் கடன் பிரிவில் பணியாற்றி வருவதாகவும், கடன் வாங்கித் தருவதாகவும், கனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல், 55, என்பவரிடம் கூறியுள்ளார்.
மேலும், கார் லோன் வாங்கித் தருவதாகக் கூறி, முன்பணமாக 5 லட்சம் ரூபாய், கார் பதிவு செய்வதற்காக 6 லட்சம் ரூபாய் வெற்றிவேலிடம் காமராஜ் வாங்கியுள்ளார்.
ஆனால், லோன் வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளார். வெற்றிவேல் விசாரித்தபோது, காமராஜ் வங்கியில் பணிபுரியாமல் ஏமாற்றியது தெரியவந்தது.
மேலும், இதுபோன்று காமராஜ் பலரிடம் ஏமாற்றியிருப்பதும் தெரியவந்தது. வெற்றிவேல் புகாரின்படி, திருக்கோவிலுார் போலீசார் காமராஜை நேற்று கைது செய்தனர்.