தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கிராம மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி பேர்வழிகள்: விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

கிராம மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி பேர்வழிகள்: விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

கிராம மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி பேர்வழிகள்: விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?


UPDATED : அக் 12, 2026 06:41 PM

ADDED : அக் 12, 2026 06:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 06:41 PM ADDED : அக் 12, 2026 06:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிராம மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அதிகளவில் கிராமப் பகுதிகளைக் கொண்டுள்ளது. கிராம மக்கள் பெரும்பாலானோர் பல்வேறு வகைகளில் உதவித் தொகை மற்றும் திட்ட பயன்பாட்டிற்கு மனுக்கள் அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் மாத உவித் தொகை, கழிவறைக் கட்டடம் கட்டுவதற்கான லோன் பெற்றுத் தெருவதாக கிராம மக்களை நம்ப வைத்து பல்வேறு வகைகளில் ஏமாற்றுகின்றனர்.

தொடர்ந்து அவர்களிடம் போலி விண்ணப்பங்களை அளித்து பூர்த்தி செய்து தருமாறு கூறி, விண்ணப்பங்களுக்கு கிராம மக்களிடம் 100 முதல் 500 ரூபாய் வரை வசூல் செய்கின்றனர்.

சிலர் அறக்கட்டளை என்ற பெயரில் நிதியுதவி பெற்றுத் தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். இதுபோன்ற மோசடி பேர்வழிகள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.

சில நேரங்களில் கிராமத்தில் விபரம் அறிந்த சிலர், மோசடி பேர்வழிகளிடம் கேள்வி எழுப்பும்போது, உஷராகி அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகின்றனர். சிலர் சம்மந்தப்பட்ட அரசு துறை அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு, மோசடி நபர்களை எச்சரித்து அனுப்பி வைக்கும் சம்பவமும் நிகழ்கிறது.

சிறிய தொகை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க கிராம மக்கள் யாரும் முன்வராததை மோசடி பேர்வழிகள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதனையடுத்து சில நாட்களில் கழித்து வேறு கிராமங்களில் தங்களது கைவரிசையைக் காட்ட துவங்கி விடுகின்றனர்.

இதுபோன்ற சம்பவம் கிராமப் பகுதிகளில் தற்போது அதிகரித்துள்ளது. எனவே, கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மோசடி பேர்வழிகளை பிடித்து காவல் துறையின் மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us