வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : ஆக 22, 2026 04:41 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் குரூப்–2 மற்றும் 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் முரளிதரன் தலைமை தாங்கினார். 57 தேர்வர்கள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர் ஆர்.டி.ஓ., முருகன் பேசுகையில், ‘டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வு மூலமாக 821 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இத்தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு அனுபவமிக்க ஆசியர்களைக் கொண்டு இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தப்படுகிறது.
இதனை தேர்வர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நேர மேலாண்மையை வகுத்து தினமும் படிக்க வேண்டும். இதுவரை நடந்த தேர்வு வினாத்தாள்களை சேகரித்து அதில் உள்ள கேள்விகளுக்கும் பதில் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.
தொடர்ந்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் பயின்று போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது அரசு துறைகளில் பணிபுரியும் 8 பேர் பேசினர்.
