ADDED : ஆக 10, 2025 11:40 PM

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் ரோட்டரி கிளப், சங்கரா கண் மருத்துவமனை, அருணா பார்மஸி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
ரோட்டரி கிளப் துணைத்தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜனார்த்தனன், முன்னாள் துணை ஆளுநர்கள் முத்துக்கருப்பன், வெங்கடேசன், இன்னர்வீல் கிளப் செயலாளர் ஜெயசக்தி முன்னிலை வகித்தனர். தேர்வுத்தலைவர் சங்கர் வரவேற்றார். மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார், செயலாளர் மதியழகன் முகாமினை துவங்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினர். கோயம்புத்துார் சங்கரா மருத்துவமனை கண் டாக்டர்கள் ஐஸ்வர்யா, ஹர்டி ஆகியோர் 455 நோயாளிகளை பரிசோதித்து, மருந்து மாத்திரை வழங்கினார். இதில், 143 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கோயம்புத்துாருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதில், மூத்த மருந்து வணிகர் அருணாச்சலம், ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர்கள் மூர்த்தி, சுதாகரன், நடராஜன், அசோக்குமார், தேர்வுத்தலைவர் துரை, டாக்டர் கோதை, இன்னர்வீல் கிளப் பொருளாளர் கலைவாணி, பொதுச்சேவை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குசேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் முனுசாமி நன்றி கூறினார்.