தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்


UPDATED : அக் 13, 2026 04:29 PM

ADDED : அக் 13, 2026 04:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 04:29 PM ADDED : அக் 13, 2026 04:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் ரோட்டரி கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை, சங்கராபுரம் பி.ஏ., குரூப்ஸ் சார்பில் டி.எம்.பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி தலைவர் துரை தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்டாலின் வரவேற்றார்.

முன்னாள் ரோட்டரி துணை ஆளுநர் ராஜேந்திரன், மகேந்திரன், ரோட்டரி துணை ஆளுநர சுதாகரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் வாசவி கிளப் இண்டர்நேஷனல் கவர்னர் சமுத்திர ராஜ்குமார் முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர்கள் குழு, 205 பேருக்கு கண்களை பரிசோதனை செய்தனர். இதில் 150 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டனர்.

முகாமில் முன்னாள் ரோட்டரி தலைவர்கள், உறுப்பிணர்கள் பங்கேற்றனர். பொருளாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us