ADDED : மார் 18, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் லயன்ஸ் சங்கம், புதுச்சேரி அரவிந்த் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு, லயன்ஸ் சங்க ஆலோசகர் முருகன் தலைமை தாங்கி முகாமைத் தொடங்கி வைத்தார். டாக்டர் கலையரசி முன்னிலை வகித்தார்.
இரண்டாம் துணை ஆளுநர் ராஜா சுப்ரமணியம், மாவட்ட தலைவர்கள் உலகநாதன், சந்தோஷ், ராமகிருஷ்ண ரமணன், பால்ஆரோக்கியராஜ், லயன்ஸ் சங்கத் தலைவர் பரணி, செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் உஷாராணி உட்பட பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவக் குழுவினர், முகாமில் பங்கேற்ற 300 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்.
இதில் 40 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

