ADDED : பிப் 17, 2026 04:26 AM

அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில், டி.எம்., பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. ரோட்டரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் மோகன்தாஸ் வரவேற்றார். முன்னாள் தலைவர்கள் முத்துக்கருப்பன், ரகுநந்தன், சுதாகர், அசோக், சீனிவாசன், கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர்.
சேதுலட்சுமி வெங்கட்நாராயணன் முகாமை துவக்கி வைத்தார். கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் பிரவீனா மற்றும் குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். 124 பேர் கலந்துகொண்டனர். இதில், 51 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு, கோவை அழைத்து செல்லப்பட்டனர். பொருளாளர் முனுசாமி நன்றி கூறினார்.
