ADDED : மார் 14, 2026 05:34 AM

திருக்கோவிலுார்: மார்ச் 14-: திருக்கோவிலுார் ரோட்டரி கிளப் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
திருக்கோவிலுார் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், திருக்கோவிலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் வாசன், செந்தில்குமார் வழிகாட்டுதலில் தலைவர் கோதம்சந்த் முகாமை துவக்கி வைத்தார்.
கோவை சங்கரா கண் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ குழுவினர் பங்கேற்று முகாமில் கலந்து கொண்ட 74 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 15 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சங்க செயலாளர் ராஜேஷ் குமார், பொருளாளர் காமராஜ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பதம் சந்த், ராஜேந்திரன், நவரத்தன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மகாவீர்சந்த், முத்துக்குமாரசாமி முகாமை முன் நின்று நடத்தினர்.
