ADDED : நவ 03, 2024 11:29 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் நடந்த முகாமை ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை துவக்கி வைத்தார். மண்டல துணை ஆளுனர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் சிவகுமார் வரவேற்றார்.
முகாமிற்கான நிதியுதவி வழங்கிய ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் சுரேஷ்பாபு, முன்னாள் செயலாளர் பாண்டியன், முன்னாள் பொருளாளர் கோவிந்தன், சிறுவங்கூர் ராமலிங்கம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர்கள் தபிதா, அன்ஸ் சிவான் குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.
நேற்று காலை 9:00 மணியிலிருந்து மதியம் 3:00 மணி வரை நடந்த முகாமில் 270 பேர் பயனடைந்தனர். அதில் 79 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு, கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு கண் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏற்பாடுகளை முன்னாள் தலைவர்கள் முத்துசாமி, ராமலிங்கம், இமானுவேல் சசிகுமார், உறுப்பினர்கள் சந்தானம், அம்பேத்கர், செல்வராஜ், சீனிவாசன், ராமச்சந்திரன், உதயகுமார் செய்திருந்தனர். பொருளாளர் பாபு நன்றி கூறினார்.