ADDED : ஜூலை 10, 2025 09:20 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி, மந்தைவெளி திடலில் பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டுநடந்த முகாமிற்கு, மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மைக்கேல் செங்கோடன், தேசியபொதுக்குழு உறுப்பினர்கள் அசோக்குமார், செந்தில்ராஜா, மாநில செயலாளர் கூட்டுறவு பிரிவு இந்தியன் துரைவேல்,மாவட்ட துணைத் தலைவர் வர்த்தக பிரிவு கண்ணன், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் முன்னிலைவகித்தனர். மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி வரவேற்றார்.
நேரு கண் மருத்துவமனை டாக்டர்கள் நேரு, சிபி, அகர்வால் கண் மருத்துவமனை மண்டல இயக்குநர் சிவாஉள்ளிட்ட மருத்துவக்குழுவினர் 130 பேருக்கு சிகிச்சைஅளித்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் குணா, அன்பழகன், ஸ்ரீராம்சுவாமி, சீனிவாசன், விநாயகம், தங்கம், வேல்முருகன்,தனசேகர், மாரியாப்பிள்ளை, சங்கர், ராமச்சந்திரன் மற்றும் ஒன்றிய தலைவர்கள் வெங்கடேசன், சக்திவேல்,சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்டத் துணைத் தலைவர் தரவு மேலாண்மை பிரிவு சதீஸ்சந்தர் நன்றிகூறினார்.