/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கத்தில் இலவச மருத்துவ முகாம்
/
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கத்தில் இலவச மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கத்தில் இலவச மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கத்தில் இலவச மருத்துவ முகாம்
ADDED : ஆக 12, 2025 11:11 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம், கோயம்புத்துார் ஜெம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி எம்ஆர்.என்., நகர் ரோட்டரி நுாற்றாண்டு மண்டபத்தில் நடந்த மருத்துவ முகாமினை கள்ளக்குறிச்சி ரோட்டரி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் மூர்த்தி, குமாரபாளையம் ரோட்டரி சங்க தலைவர் மகேஷ், கோயம்புத்துார் மாவட்ட பொதுச்செயலாளர் கர்ணன், இண்டராக்ட் கிளப் தலைவர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். கோயம்புத்துார் ரோட்டரி சிறப்பு திட்ட சேர்மன் ரேவதி, மாவட்ட ஆளுநர் சிவசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
ஜெம் மருத்துவமனை குடல்நோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நவின்குமார், தினேஷ்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் 300க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். அதில் 21 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கோயம்புத்துார் ஜெம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி ரோட்டரி சாசன செயலாளர் ஆதிகேசவன், மூத்த உறுப்பினர்கள் பெருமாள், முத்துசாமி, எத்திராஜ், சசிகுமார், ராமலிங்கம், செல்வராஜ், பாலா, கந்தசாமி, சுரேஷ்பாபு, சேகர், திருவாசகமணி, முத்துராமலிங்கம், செல்வராஜ், கோவிந்தன், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.