/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நீலமங்கலம் மாரியம்மனுக்கு பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்
/
நீலமங்கலம் மாரியம்மனுக்கு பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்
ADDED : ஜன 28, 2024 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
அதனையொட்டி நேற்று மாலை மகாசக்தி மாரியம்மன் மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரங்களுக்குப்பின் உற்சவம் மாரியம்மன் சுவாமி ராஜகோபுரம் முன்புள்ள ஊஞ்சலில் எழுந்தருள செய்தனர்.
கிராம தேவதைகள் வழிபாடு நடந்தது. பக்தர்கள் நலன் வேண்டி சங்கல்பம் செய்துவைக்கப்பட்டு, வழிபாடுகளை நடத்தினர். தொடர்ந்து மாரியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம், தாலாட்டு பாடல்கள் பாடி நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.