/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதிய ரயில் பாதை ஆய்வு பணிக்கு நிதி ஒதுக்கீடு: கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் மகிழ்ச்சி
/
புதிய ரயில் பாதை ஆய்வு பணிக்கு நிதி ஒதுக்கீடு: கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் மகிழ்ச்சி
புதிய ரயில் பாதை ஆய்வு பணிக்கு நிதி ஒதுக்கீடு: கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் மகிழ்ச்சி
புதிய ரயில் பாதை ஆய்வு பணிக்கு நிதி ஒதுக்கீடு: கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் மகிழ்ச்சி
ADDED : மே 16, 2025 02:37 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியிலிருந்து உளுந்துார்பேட்டை, திருவண்ணாமலை வரையிலான புதிய ரயில் பாதை அமைப்பது குறித்த ஆய்வு பணிகளுக்கு தென்னக ரயில்வே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி - சின்னசேலம் வரையிலான, 17.4 கி.மீ., நீளத்திற்கு பணிகள் திட்டமிடப்பட்டு தற்போது கள்ளக்குறிச்சிக்கு, 5.3 கி.மீ., முன்பாக, பொற்படாக்குறிச்சியில் நிலையம் அமைக்கப்பட்டது.
சின்னசேலத்திலிருந்து, 12.1 கி.மீ., தொலைவில் உள்ள பொற்படாக்குறிசசி வரை அமைக்கப்பட்டு புதிய ரயில்பாதையில் ரயில்வே அதிகாரிகள் அதிவேக ரயிலை இயக்கி, வெள்ளோட்டம் பார்த்து சென்று விட்டனர்.
அத்துடன் ரயில் திட்டம் நின்றுவிடுமோ என்ற அச்ச உணர்வுடன் கள்ளக்குறிச்சி மக்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது தென்னக ரயில்வே துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த அறிக்கையில், கள்ளக்குறிச்சியிருந்து திருவண்ணாமலைக்கும், உளுந்துார்பேட்டைக்கும் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கள்ளக்குறிச்சியிலிருந்து திருவண்ணாமலை வரை 69 கி.மீ., தொலைவிற்கு ரூ.17 லட்சம்; கள்ளக்குறிச்சியிலிருந்து உளுந்துார்பேட்டை வரை 40 கி.மீ., தொலைவிற்கு ரூ.6 லட்சம்; என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கள்ளக்குறிச்சியில் ரயில் நிலையம் அமைக்கப்படுவது குறித்து அதிருப்தியில் இருந்த இப்பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், 'தென்னக ரயில்வே அதிகாரிகள் விரைவாக பொற்படாக்குறிச்சியிலிருந்து கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் ரயில் நிலையம் அமைக்கவும், இங்கிருந்து திருவண்ணாமலைக்கும், உளுந்துார்பேட்டைக்கும் புதிதாக ரயில் பாதை பணிக்கான ஆய்வு பணிகளை விரைந்து முடித்து திட்டத்தை உடன் துவக்கிட வேண்டும்'என்றனர்.