/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
/
கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
ADDED : ஜன 28, 2024 06:43 AM

கள்ளக்குறிச்சி : கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 37வது ஆண்டு விழா நேற்று நடந்தது.
சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்கு நிறுவனர் பார்வதியம்மாள் தலைமை தாங்கினார். தாளாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். செயலாளர் சாந்திரவிக்குமார் வரவேற்றார். பள்ளி முதல்வர் உஷா ஆண்டறிக்கை வாசித்தார்.
நிகழ்ச்சியில், பாலாஜி ஆசிரியர் பயிற்சி நிறுவன சேர்மன் பழனிச்சாமி, மகாபாரதி பொறியியல் கல்லுாரி தலைவர் மோகன், தர்மபுரி ஸ்ரீராம் கல்வி குழு சேர்மன் வேடியப்பன், லதா எஜிகேஷனல் சொசைட்டி பொருளாளர் முருகேசன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சண்முகம், முக்கியஸ்தர்கள் அரசு, காமராஜ், குப்புசாமி, முத்து, ஈஸ்வரமூர்த்தி, சீனிவாசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து, கடந்த கல்வியாண்டில் நடந்த பொதுத்தேர்வுகளில் பள்ளி அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கும், அதிக மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊழியர்களுக்கும் பரிசு, பொற்காசு, கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிர்வாக இயக்குநர் சக்தி நன்றி கூறினார்.