
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலூர் சப் இன்ஸ்பெக்டர் மதன் மோகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சோழவாண்டிபுரம், ஆண்டிமலை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அப்பகுதியை கண்காணித்து வந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அப்பகுதியில் இருந்த அதே ஊரைச் சேர்ந்த கணபதி மகன் சூர்சயா, 23; பிடித்து சோதனையிட்டனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அப்பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்று வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.