/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை தடுப்பு சுவரில் கேப்: விபத்து அபாயம்
/
சாலை தடுப்பு சுவரில் கேப்: விபத்து அபாயம்
ADDED : செப் 28, 2024 07:13 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பேரிகார்டு - தடுப்பு கட்டைக்கு இடையே இடைவெளி இருப்பதால் அப்பகுதி மக்கள் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படும் அபாயமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது. நான்கு முனை சந்திப்பு - பஸ் நிலையம் நுழைவு வாயில் பகுதி வரை சாலையின் நடுவே பேரிகார்டு மற்றும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரிகார்டு - தடுப்பு சுவருக்கு இடையே சாலையைக் கடக்கும் வகையில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழியாக பொதுமக்கள் பலர் வாகன போக்குவரத்து மிகுதியான நேரங்களிலும் சாலையைக் கடந்து செல்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
சில நேரங்களில் பள்ளி மாணவ மாணவிகளும் அவ்வழியாக கடந்து செல்கின்றனர். எனவே சாலையின் நடுவே உள்ள வழியை அடைத்து பாதுகாப்பான முறையில் சாலையை கடக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.