தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் தேங்கிக் கிடக்கும் குப்பைகள
தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் தேங்கிக் கிடக்கும் குப்பைகள
UPDATED : அக் 07, 2026 05:54 PM
ADDED : அக் 07, 2026 05:36 PM
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உளுந்துார்பேட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் துாய்மை பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்து துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
துாய்மை பணியாளர்களின் இந்த போராட்டத்தால் தெருக்களில், வீடுகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துாய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
