/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
/
எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
ADDED : மே 10, 2025 12:53 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் சரவணன், நளினி முன்னிலை வகித்தனர்.
நுகர்வோர் அமைப்பினர் சுப்ரமணியன், மோகன், மணி, சம்பத் உள்ளிட்டோர், பங்கேற்றனர். இண்டேன் காஸ் நிறுவன மாவட்ட வணிக மேலாளர் சுந்தர், எரிவாயு முகவர்கள், பெட்ரோல் பங்க் முகவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வீட்டு உபயோக சிலிண்டர்களை கடைகளில் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பெட்ரோல் பங்க்குகளில் தாசில்தார்கள், மண்டல மேலாளர்கள், எடை ஆய்வாளர் ஆகியோருடன் இணைந்து பெட்ரோல், டீசல் அளவு, தரம் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
பெட்ரோல் பங்குகளில் கடைசியான ஆய்வு மற்றும் அளவு சான்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், நுகர்வோர் சார்பில் தெரிவிக்கப்பட்டன.
இந்த பிரச்னைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தாசில்தார்களுக்கு உத்தரவிடப்பட்டது.