/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காஸ் டியூப் கழன்று தீ விபத்து
/
காஸ் டியூப் கழன்று தீ விபத்து
ADDED : நவ 24, 2024 11:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; உளுந்துார்பேட்டையில் சமைக்கும் போது காஸ் டியூப் கழன்று ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
உளுந்துார்பேட்டை நகராட்சி புது தெருவைச் சேர்ந்தவர் பொம்மி, 46; இவர், நேற்று மதியம் சமையல் செய்வதற்காக காஸ் சிலிண்டரை பற்ற வைத்தார். அப்போது திடீரென காஸ் சிலிண்டரின் டியூப் கழன்று கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொம்மி, வீட்டை விட்டு வெளியேறி கூச்சலிட்டுள்ளார்.
தகவலறிந்த உளுந்துார்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஈரப்பதம் கொண்ட சாக்குபையை கொண்டு காஸ் சிலிண்டர் தீ மற்றும் வீட்டின் கதவில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.