
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் வீரபாண்டியில் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சம்பத் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்ட தலைவர் கலிவரதன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் மத்திய அரசின் பட்ஜெட்டில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து விளக்கினர்.
ஒன்றிய தலைவர் பழனி, முன்னாள் ஒன்றிய தலைவர் ஹரிகிருஷ்ணன், திருக்கோவிலுார் நகர தலைவர் பத்ரிநாராயணன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.