ADDED : ஆக 26, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வில்வித்தை பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு சுதந்திர தின விழா போட்டி நடந்தது.
திருக்கோவிலூரில் பி.கே., வில்வத்தை பயிற்சி மையத்தில், 20,க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு பயிற்சி மையத்தில் 2 முதல், 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் 16 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
பயிற்சி மைய நிர்வாகி நிசார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். வழக்கறிஞர் அஸ்கர் அலி, தொழிலதிபர் கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
