/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு
/
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 13, 2025 04:01 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் முல்லைமணி தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பிரபு முன்னிலை வகித்தார். இதில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்ற தடுப்பு நடவடிக்கை, பாதுகாப்பு, பெண் குழந்தை கல்வியின் முக்கியத்துவம், இணையவழி குற்றத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்பது, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு விதிமுறைகள், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், சைபர் குற்றங்கள் ஆகியவை குறித்து இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியர் இளையராஜா நன்றி கூறினார்.