ADDED : நவ 15, 2024 04:49 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த குச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் மார்கண்டன் மனைவி உஷா, 26; திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் மார்கண்டன் திருமண நிகழ்ச்சிக்கு, போட்டோ எடுக்க சென்று விட்டார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த உஷா நேற்று காலை 5:30 மணி அளவில் வாசல் தெளித்துவிட்டு, உள்ளே சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் மகள் கிருத்திகா, 6: பெட்ரூமில் உள்ள மின்விசிறியில் தாய் உஷா துாக்கில் தொங்கியதை பார்த்து அலறினார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று உஷாவை மீட்டு பார்த்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.
தகவல் அறிந்த மணலுார்பேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.