ADDED : பிப் 21, 2024 08:09 AM
அ நிறம் | அளவு
ரிஷிவந்தியம் : பாசாரில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி பொன்மணி,27; கடந்த 19ம் தேதி இரவு பொன்மணி குடும்பத்தினர் வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு துாங்க சென்றுள்ளனர். இந்நிலையில், இரவு 10.30 மணியளவில் கணவன் வேல்முருகன் எழுந்து பார்த்தபோது, மனைவி பொன்மணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
தகவலறிந்த ரிஷிவந்தியம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்த பொன்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
