/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமிக்கு தொல்லை; போலீஸ்காரர் மீது 'போக்சோ'
/
சிறுமிக்கு தொல்லை; போலீஸ்காரர் மீது 'போக்சோ'
ADDED : செப் 16, 2025 12:35 AM

கள்ளக்குறிச்சி; சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுாரை சேர்ந்தவர் பிரபு, 38; எஸ்.பி., அலுவலக தனிப்பிரிவு ஏட்டு. மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
கரியாலுாரில் பெட்டிக்கடையில் புகையிலை விற்றதாக, சில மாதங்களுக்கு முன் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, கடை உரிமையாளர் வீட்டிற்கு விசாரணை என்ற பெயரில் அடிக்கடி சென்ற பிரபு, உரிமையாளர் மகளான, 17 வயது சிறுமியிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன், சிறுமி வீட்டிற்கு சென்ற பிரபு, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமாவிடம் புகார் அளித்தார்.
டி.ஐ.ஜி., உத்தரவில், போலீசார் நேற்று முன்தினம், கரியாலுார் காவலர் குடியிருப்பில், பிரபு தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டனர். அங்கு, 50 லிட்டர் கள்ளச்சாரயம், 60 மதுபாட்டில்கள், ஏழு நாட்டு துப்பாக்கிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பிரபு மீது, வன்கொடுமை தடுப்பு சட்டம், போக்சோ உட்பட, 12 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பிரபுவை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., மாதவன் உத்தரவிட்டார்.