ADDED : ஜன 16, 2025 04:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : தேவபாண்டலம் சிவன் கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவை படித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவையை மார்கழி மாதம் முழுவதும் வழிபாடு செய்த மாணவர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கும் விழா நடந்தது.
கோவில் அறங்காவலர் செந்தில்குமார் தலைமை தாங்கி பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் சைவ சித்தாந்த திருமுறை பயிற்சி அமைப்பாளர் ராமதாஸ், ரவி குருக்கள், பிரதோஷ வழிபாட்டு மன்ற அமைப்பாளர் கணபதி பங்கேற்றனர்.

