/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஞானானந்தா பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
/
ஞானானந்தா பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
ADDED : மே 10, 2025 12:49 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று தொடர் சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் 80 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சி இலக்கை பெற்றுள்ளனர்.
மாணவர் மனிஷ் குமார் 575 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவி மனிஷா 574, மாணவர் ஹரிஷ் 567 மதிப்பெண் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். 50 மாணவர்கள் 500க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர் வெற்றி சாதனையாக, 34வது ஆண்டாக இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
தலைமை ஆசிரியை ஹேமலதா, வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாகி முகில்வண்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்.