ADDED : ஜூலை 24, 2025 10:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே காரில் ஆடுகளை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ரிஷிவந்தியம் குளத்து மேட்டுதெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன், 42; விவசாயி. கடந்த 21ம் தேதி இரவு 10:00 மணிக்கு, வீட்டின் முன் 2 ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.
மறுநாள் 22ம் தேதி காலை பார்த்தபோது, ஆடுகள் திருடுபோனது தெரியவந்தது.
புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் நள்ளிரவு, காரில் வந்த மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

