/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அத்தியூர் வாரச் சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
/
அத்தியூர் வாரச் சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
அத்தியூர் வாரச் சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
அத்தியூர் வாரச் சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ADDED : ஜன 17, 2024 07:46 AM

ரிஷிவந்தியம் : பொங்கல் பண்டிகையின் கரிநாளை முன்னிட்டு, அத்தியூர் சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
வாணாபுரம் தாலுகா, அத்தியூர் கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறும். இதில், அதிகாலை கால்நடை விற்பனையும், மாலையில் காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனையும் படுஜோராக நடக்கும்.
கால்நடை சந்தையில் ஆடுகள் அதிளவில் விற்பனையாகும் என்பதால், கள்ளக்குறிச்சி மட்டுமின்றி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த கால்நடை வியாபாரிகள், விற்பனையாளர்கள் அத்தியூருக்கு வருவது வழக்கம். அதேபோல், பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், இறைச்சி கடை வியாபாரிகள் ஆடுகளை பேரம் பேசி வாங்கி செல்வர்.
இன்று(17ம் தேதி) கரிநாள் என்பதால் பொதுமக்கள் அனைவரும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து அசைவ உணவுகளை சாப்பிடுவது வழக்கம். இதையொட்டி, அத்தியூர் சந்தையில் ஆடுகளை வாங்க மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. மேலும், சாதாரண நாட்களை விட ஆடுகளின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. ஆடுகள் 5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.1.50 கோடிக்கு வர்த்தகம் நடந்ததால், ஆடு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

