/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அத்தியூர் வார சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
/
அத்தியூர் வார சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
அத்தியூர் வார சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
அத்தியூர் வார சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ADDED : அக் 15, 2025 06:52 AM

ரிஷிவந்தியம் : தீபாவளி பண்டிகை முன்னிட்டு நடந்த அத்தியூர் வாரச்சந்தையில் ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த அத்தியூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் வார சந்தை நடந்து வருகிறது. இங்கு தீபாவளி, பொங்கல், ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடக்கிறது.
பண்டிகை நாட்களில் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கடலுார் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், வியாபாரிகளும் வருவது வழக்கம். இந்நிலையில் வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி நேற்று நடந்த வார சந்தையில் ஏராளமான செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் விற்பனைக்கு குவிந்தன. ஆடு ஒன்று 5,000 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. நேற்று ஒரே நாளில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடந்ததால், வியாபாரிகள், ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்தனர்.