/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு
ADDED : ஜூலை 12, 2025 11:24 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே விவசாய தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கணங்கூர் புதுக்காலனியை சேர்ந்தவர் சிங்காரம், 57; இவர் நேற்று முன்தினம் பகல் 12.30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் விவசாய வேலைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு கிடந்தது.
வீட்டிற்குள் இருந்த 14 கிராம் தங்க நகைகளையும், 15 ஆயிரம் பணம் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டது. இது குறித்து சிங்காரம் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து நகை பணம் திருடிய சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

