
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: பஹல்காம் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு காங்., சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
முகையூர் வட்டார காங்., சார்பில் ஜம்மு-காஷ்மீர், பஹல்காமில் சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், மணம்பூண்டியில் சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் வாசிம் ராஜா தலைமையில், காங்., கட்சியினர் மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் முகையூர் வட்டார தலைவர் பழனி, மகிலா காங்., தலைவர் மேரி ஸ்டெல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.