/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்துார்பேட்டை பணிமனையில் அரசு பஸ் தீப்பிடித்து சேதம்
/
உளுந்துார்பேட்டை பணிமனையில் அரசு பஸ் தீப்பிடித்து சேதம்
உளுந்துார்பேட்டை பணிமனையில் அரசு பஸ் தீப்பிடித்து சேதம்
உளுந்துார்பேட்டை பணிமனையில் அரசு பஸ் தீப்பிடித்து சேதம்
ADDED : ஜூலை 24, 2025 04:02 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தப்பட்ட பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.
உளுந்துார்பேட்டை சென்னை சாலையில், விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதுதவிர, 20க்கும் மேற்பட்ட காலாவதியான பஸ்களும் உடைக்கும் பணிக்காக நிறுத்தி வைத்திருந்தனர்.
நேற்று காலை 5:00 மணிக்கு, பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பெங்களூரு செல்லும் அரசு பஸ் (டிஎன்32- என்4397) திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. தீ மளமளவென பரவி பஸ் முழுதும் எரிந்தது. ஊழியர்கள் அளித்த தகவலின்பேரில் உளுந்துார்பேட்டை தீயணைப்பு வீரர்கள், நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.
இதனால் மற்ற பஸ்கள் தீ விபத்தில் இருந்து தப்பின. இச்சம்பவம் தொடர்பாக பணிமனை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் கூறுகையில், பஸ் பேட்டரி ஒயரில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.