/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு கல்லுாரி மாணவியர் விடுதி திறப்பு
/
அரசு கல்லுாரி மாணவியர் விடுதி திறப்பு
ADDED : செப் 28, 2025 03:48 AM

ரிஷிவந்தியம்: பாவந்துாரில் தற்காலிக கல்லுாரி மாணவியர் விடுதி கட்டடம் திறப்பு விழா நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில், நீண்ட துாரத்தில் இருந்து வரும் மாணவிகள் தங்கி படிப்பதிற்காக, தற்காலிக கல்லுாரி விடுதி கட்டடம் தேர்வு செய்யப்பட்டு, திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் பிரசாந்த், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆகியோர் ரிப்பன் வெட்டி கட்டடத்தை திறந்து வைத்தனர். இக்கட்டடத்தில் 100 மாணவிகள் தங்க முடியும். சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, உணவு, கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய சேர்மன்கள் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், தாமோதரன், துணை சேர்மன் நெடுஞ்செழியன், கல்லுாரி உதவி பேராசிரியர் சண்முகம், தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர் பிரபு, ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி, நிர்வாகி ராஜி கலந்து கொண்டனர்.