/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 12, 2025 02:35 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரியில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் டாக்டர் ஸ்ரீநாத் தலைமை தாங்கினார்.
பொருளாளர் டாக்டர் வினோத்குமார், துணை தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இதில் டாக்டர்கள் சுந்தரபாண்டியன், பெரியநாயகி, சத்யா பிரியதர்ஷினி, தங்கராஜ், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்று, கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.
மருத்துவக்கல்லுாரியில் பணிபுரியும் இணை பேராசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில், ஒரு வருடத்திற்கும் குறைவாக ஸ்டேஷன் சீனியாரிட்டி உள்ள டாக்டர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்ற விதியை தளர்த்த வேண்டும், இணை பேராசிரியர்கள் கலந்தாய்வில் மீண்டும் பழைய முறை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடர்ந்து, மருத்துவக்கல்லுாரியில் பணிபுரியும் டாக்டர்களிடம் கையெழுத்து பெற்று, அத்துடன் கோரிக்கை மனு இணைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளருக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்தனர்.