ADDED : செப் 10, 2026 07:32 PM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா கல்வி செயல்பாடுகளை குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ஆசிரியர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறை குறித்து அறிவுறுத்தினார். பின், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை நேரில் சந்தித்து வரும் பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெறுவதுடன் அதிக மதிப்பெண் பெறும் வகையில் திட்டமிட்டு படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பள்ளியில் கடந்த பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பில் மாவட்டத்தில் சிறப்பிடம் பிடித்த மாணவி போன்று மற்ற மாணவர்களும் சிறப்பிடம் பிடிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
