/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விளையாட்டு மைதானம் இல்லாமல் அரசு பள்ளி மாணவிகள் அவதி
/
விளையாட்டு மைதானம் இல்லாமல் அரசு பள்ளி மாணவிகள் அவதி
விளையாட்டு மைதானம் இல்லாமல் அரசு பள்ளி மாணவிகள் அவதி
விளையாட்டு மைதானம் இல்லாமல் அரசு பள்ளி மாணவிகள் அவதி
ADDED : ஜூன் 26, 2025 02:38 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2 ஆயிரம் மாணவியர் படிக்கின்றனர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள பெண்கள் பள்ளிக்கு தனியாக விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவிகள் பயிற்சி எடுத்து போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
மாணவிகளுக்கு வகுப்பறை கட்டடம் அமைப்பதற்கே பள்ளி வளாகத்திற்குள் இடமில்லை. இதனால் விளையாடுவதற்கு இடவசதி இன்றி பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
மத்திய அரசின் 'கேலோ இந்தியா' திட்டம் இளம் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கி உள்ளது.
இதில் தேர்வாகும் பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சாதிக்கின்றனர். விளையாட்டு மைதானம் இல்லாததால் இப்பள்ளி மாணவிகள் போதிய பயிற்சி பெற முடியாமல் போட்டிகளுக்கு செல்லும்போது மட்டும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள விளையாட்டு மைதானத்தை பயன்படுத்திக் கொள்ளும் நிலை உள்ளது.
அங்கு கழிவறை, உடைமாற்றும் வசதி இல்லாததால் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவிகளுக்கு போதிய பயிற்சி அளித்து ஊக்குவிக்கும் வகையில் தியாகதுருகம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தனியாக விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.