/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி மாணவர்கள் மாநில ஹாக்கி போட்டிக்கு தகுதி
/
அரசு பள்ளி மாணவர்கள் மாநில ஹாக்கி போட்டிக்கு தகுதி
அரசு பள்ளி மாணவர்கள் மாநில ஹாக்கி போட்டிக்கு தகுதி
அரசு பள்ளி மாணவர்கள் மாநில ஹாக்கி போட்டிக்கு தகுதி
ADDED : டிச 20, 2024 05:23 AM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 3வது ஆண்டாக மாநில அளவில் நடைபெற உள்ள ஹாக்கி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. முன்னதாக, குறுவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று, முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.
இதில், ஹாக்கி போட்டியில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 5 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இறுதியில், ரிஷிவந்தியம் அரசு பள்ளி அணி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்த அணியினர் ஜனவரி மாதம் மதுரையில் நடைபெறும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
ரிஷிவந்தியம் அரசு பள்ளி மாணவர்கள் ஹாக்கி போட்டியில் தொடர்ந்து 3 வருடங்களாகவும், கபடி போட்டியில் தொடர்ந்து 2 வருடங்களாகவும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன், உடற்கல்வி இயக்குநர் ஹரிஹரன் பாராட்டினர்.