/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் அரசு செயலர் ஆய்வு
/
கல்வராயன்மலையில் அரசு செயலர் ஆய்வு
ADDED : செப் 30, 2025 02:35 AM

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலர் ஆய்வு செய்தார்.
கல்வராயன்மலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பகுதி மக்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சுயதொழில் முன்னேற்றத்திற்கான பயிற்சி அளிப்பதுடன் மானியம் வழங்கப்படுகிறது.
இதன்படி மணியார்பாளையம் கிராமத்தில் அரசு உதவியுடன் துவங்கப்பட்டுள்ள வெண்பன்றி வளர்ப்பு பண்ணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் லட்சுமிபிரியா, மாவட்ட கலெக்டர் பிரசாந்த், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது பண்ணையின் செயல்பாடுகள் வெண்பன்றி வளர்ப்பு, விற்பனை, லாபம் குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து விவசாயிகளுக்கு நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வேளாண் கருவிகளின் பயன்பாடுகள், அதனை பாதுகாத்து வைக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வேளாண் கருவிகள் பாதுகாப்பு மையத்தின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டனர். தொடர்ந்து வெள்ளிமலை ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விடுதியில் வழங்கப்படும் உணவு, குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.