/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேளாண் கண்காட்சிக்கு இடம் அரசு செயலர் ஆய்வு
/
வேளாண் கண்காட்சிக்கு இடம் அரசு செயலர் ஆய்வு
ADDED : ஏப் 14, 2025 06:38 AM

கள்ளக்குறிச்சி : மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்த இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக, அரசு செயலர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய 14 மாவட்டங்களை உள்ளடக்கி, வடக்கு மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.
இதில், 70 அரசு நிறுவனம் சார்ந்த அரங்குகள், 130 தனியார் நிறுவனங்கள் என, 200 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
இதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக கள்ளக்குறிச்சி அடுத்த உலங்காத்தான் கிராமத்தில் கள ஆய்வு செய்யப்பட்டது.
அதில் அரசு செயலர் தட்சணாமூர்த்தி, வேளாண்மை இயக்குனர் முருகேஷ் ஆகியோர் கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருட்கள் வரத்து மற்றும் விற்பனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் சென்னை வேளாண்மை இணை இயக்குனர் சங்கரசுப்ரமணியன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சத்தியமூர்த்தி, துணை இயக்குனர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

