/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி மாணவர்கள் என்.எல்.சி., களப்பயணம்
/
அரசு பள்ளி மாணவர்கள் என்.எல்.சி., களப்பயணம்
ADDED : பிப் 15, 2024 11:45 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் களப்பயணத்தை சி.இ.ஓ., துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், கைவினை கூடங்களுக்கு களப்பயணமாக அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். அதன்படி மூரார்பாது மற்றும் செல்லம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி அடிப்படை மின் பொறியியல் பிரிவில் பயிலும் 45 மாணவர்கள் களப்பயணமாக நெய்வேலியில் உள்ள என்.எல்.சி., நிறுவனத்தை பார்வையிட அழைத்து செல்லப்பட்டனர்.
மாணவர்களின் களப்பயணத்தை கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., முருகன் துவக்கி வைத்து, வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை, தொழிற்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், பள்ளி மேலாண்மை மைய தகவல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானவேல், தொழிற்கல்வி பயிற்றுனர்கள் அக் ஷயா, சரண்யா, தலைமையாசிரியர்கள் வேலுசாமி, ரமேஷ், தொழிற்கல்வி ஆசிரியர்கள் அல்லாபாக் ஷ், வேல்முருகன், பழனிவேல் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.