/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.கே.டி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
ஏ.கே.டி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஜூலை 15, 2025 06:17 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் 12வது பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவிற்கு, ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சிவக்குமரன் வரவேற்றார். விழாவில் கோயம்புத்துார் ஹீரோ டெக் இந்திய நிறுவனத்தின் இயக்குனர் செந்தில் பார்த்தசாரதி, சென்னை எலக்டரிக்கல் இன்ஜினியரிங் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதிஷ்குமார் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினர்.
விழாவில் கல்லுாரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர். கல்லுாரி துணை முதல்வர் சிவக்குமார் நன்றி கூறினார்.